உலக மலேரியா தினம் ஜெயங்கொண்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு
உலக மலேரியா தினம் ஜெயங்கொண்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.;
ஜெயங்கொண்டம் ஏப்.25- உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உலக மலேரியா தினம்- 2025 ஆம் ஆண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார்நோய் தடுப்பு மற்றும் கொசுவால் பரவும் நோய்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்வில் களப்பணி உதவியாளர் விஜயகுமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே நின்று நோய் தடுப்பு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.