கோவை: தண்டுமாரியம்மன் கோவிலில் அய்யனார் சுவாமிகள் தரிசனம் !

கோவை,அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் ஸ்ரீ அய்யனார் ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ சீனிவாச சுவாமிகள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2025-04-25 10:07 GMT
கோவை,அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் இன்று (24) ஸ்ரீ அய்யனார் ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ சீனிவாச சுவாமிகள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான 15-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக தண்டுமாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், ஸ்ரீ அய்யனார் ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ சீனிவாச சுவாமிகள் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிகள் அம்மன் சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்தார். பக்தர்கள் பலரும் சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றனர்.

Similar News