கோவை: கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் !
கோவை அருகே உள்ள காளப்பட்டி பகுதியில் கே.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அதன் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின.;
கோவை அருகே உள்ள காளப்பட்டி பகுதியில் கே.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அதன் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாம், காவேரி சேவைகள் மூலம் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்.பி.நவீன்குமார் செய்திருந்தார். இந்த பயனுள்ள மருத்துவ முகாமிற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.