சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தெப்பத் திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு இன்று காலை மரபு படி கோவிலை சுற்றி உள்ள கிராம ஊர் பெரியவர்களுக்கு மஞ்சள் வாழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிலை பாக்கு மஞ்சள் நிகழ்ச்சி நிரல் ஆகியவை வைத்து கோவில்களின் இணை ஆணையர் பழனி குமார் அறநிலை துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் பெரியோர்களுக்கு வழங்கினர். திருவிழா வரும் 28ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்குகின்றது.