சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் நேற்று மாலை நைனார் புதூர் அருகே ரோந்து பணி மேற்கொண்டார். அபோது சந்தேகப்படும்படி நின்ற நபரை சோதனை செய்ததில் அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக 15 கிராம் எடை கொண்ட பத்து பாக்கெட் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் புத்தளம், அம்பலபதியைச் சார்ந்த சுதர்சன் (28) என்பதும் தெரியவந்தது. அதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.