சாமிதோப்பு வளம் பெண்கள் சிறு தொழில் முனைவோர் குழுவின் நான்காம் ஆண்டு துவக்க விழா சாமிதோப்பில் வைத்து நடைபெற்றது. குழுவின் பொருளாளர் ஜெயபார்வதி வரவேற்புரை நிகழ்த்தினார். குழுவின் செயலாளர் ரெஜின் மேரி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார். ப்ரோ விஷன் நிர்வாக இயக்குனர் முனைவர் ஜான்சன் ராஜ் தலைமை உரை நிகழ்த்தினார். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் வழக்கறிஞர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் மேரி பிரின்சி லதா, சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குழு உறுப்பினர் பவானி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ ஆய்வாளர் டாக்டர் என்.கே. சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.