குமரி அதிமுக கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் டி கே மகேஷ் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அருகில் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார், குமரி கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், தோவாளை தெற்கு ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் உள்ளனர்.