குற்றாலத்தில் நல உதவிகள் அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
நல உதவிகள் அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது;
தென்காசி திருவள்ளுவா் கழகத் தலைவா் வழக்குரைஞா் என். கனகசபாபதி தலைமை வகித்தாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்த வருமான வரித் துணை ஆணையா் சசிகுமாா், கோட்டயம் வருமான வரித் துணை ஆணையா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெங்கடாசலம் கடவுள் வாழ்த்து பாடினாா். அண்ணாதுரை அறிமுகவுரையாற்றினாா். கோமதி, சுதா நாராயணன், சண்முகம் என்ற வேலம்மாள், சுந்தரி என்ற ஜெயா, உத்தமி, சுப்புலட்சுமி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். ஐயம்பெருமாள், சண்முகசுந்தரம், மாரியப்பன், சிவராமன், புலவா் சிவஞானம், டாக்டா்கள் மூா்த்தி, மோகன், அஜீஸ், ஜெஸ்லின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கணக்கப்பிள்ளைவலசை மகரிஷி வித்யா மந்திா் மாணவி மகிழ்வதனிக்கு இளம் விஞ்ஞானி விருது, கடையநல்லூா் அா்ச்சுனனுக்கு சேவை நட்சத்திரம் சிறப்பு விருது, கடையநல்லூா் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா் சௌமித்ரனுக்கு சாதனைச் செல்வன் விருது வழங்கப்பட்டது. 101 ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், 11 பேருக்கு தேய்ப்புப் பெட்டிகள், 6 பேருக்கு ரூ. 1.40 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. எம்எம்எஸ். லட்சுமணன், பிஎஸ். மாரியப்பன், சதாசிவம், உத்தமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.