ஆளுநரை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
பரபரப்பு ஏற்படுத்தியது;
உதகையில் ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தும் ஆளுநரை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முயன்ற 40 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். - உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டியுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி, ஆளுநரின் சட்டமீறுதல்களுக்கு துணை போகும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் போஜராஜ் தலைமையில் உதகையில் உள்ள ஏடிசி பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். சுமார்50க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. - ஊட்டியில் இரு நாட்கள் துணை வேந்தர்கள் மாநாடு நடப்பதால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.