அவிநாசியில் தனியார் தோட்டத்தில் வளர்ந்திருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்திய இரண்டு பேர் கைது.கடத்தல் மரத்தை விலைக்கு வாங்கிய வரும் கைது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் ரோட்டில் தனியார் தோட்டத்தில் வளர்ந்திருந்த சந்தன மரத்தை இரவோடு இரவாக வெட்டி கடத்திய இரண்டு பேர் கைது கடத்தல் மரத்தை விலக்கி வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-04-25 15:18 GMT
அவிநாசி சேவூர் ரோட்டில் நாயக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஹனுமான் சேனா இயக்கத்தின் மாநிலச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் முன்பு உள்ள தோட்டத்தில் சந்தன மரம் தானாக வளர்ந்திருந்தது. சுமார் 25 வருடம் வளர்ச்சி உடைய மரத்தை கடந்த 18ம் தேதி இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர். இது குறித்து அவிநாசி போலீசாரிடம் தியாகராஜன் புகார் அளித்தார். அவிநாசி போலீஸ் தீவிர விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசையபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ்மோகன் பிரான்சிஸ் லூயிஸ் 30 பெரியசாமி மகன் சகாயராஜ் 38 ஆகிய இருவரும் மரத்தை வெட்டி கடத்தியுள்ளது தெரியவந்தது. உடனடியாக இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா தாச கவுண்டன்புதூரில் அரசபுரம் பகுதியில் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தல் மரத்தை விலைக்கு வாங்கிய பொன்னுச்சாமியும் கைது செய்யப்பட்டார். மூவரும் அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News