எஸ்பி அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது

எஸ்பி அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது;

Update: 2025-04-25 15:48 GMT
இந்திய ராணுவத்தை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் மத்திய அரசை அரசியல் ஆதாயங்களுக்காக குறை கூறி இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்படும் திராவிட கழகத்தைச் சேர்ந்த சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் பாஜக மகளிர் அணி தலைமையில் மாவட்ட தலைவர் காளீஸ்வரி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ... கடந்த 21 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் 27 இந்தியர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள துயரச் செய்தியானது ஒவ்வொரு இந்தியருக்கும் பேரிடியாக அமைந்தது. இந்த தாக்குதலை அரசியல் ஆக்கி அதில் குளிர் காயலாம் என்று எண்ணி பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாக திராவிட கழகத்தைச் சேர்ந்த சுந்தரவல்லி என்பவர் தனது சமூகவலைத் தளத்தில், காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள் என்றும், இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜாக இதை செய்கிறது என்கின்ற தவறான தகவலை பரப்பியதை கண்டித்தும் , மேலும் இந்த தவறான தகவலை சமூகவலைத் தளத்தில் பதிவிட்ட திராவிட கழகத்தை சேர்ந்த சுந்தரவல்லி என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி , இன்று பாஜகவைச் சேர்ந்த விருதுநகர் மகளிர் அணி மாவட்ட தலைவி காளீஸ்வரி தலைமையில் ஏராளமான மகளிர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்

Similar News