ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு இறப்பு., உடலை மீட்ட காவல்துறையினர் கொலையா? தற்கொலையா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை..*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு இறப்பு., உடலை மீட்ட காவல்துறையினர் கொலையா? தற்கொலையா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை..*;

Update: 2025-04-25 15:49 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு இறப்பு., உடலை மீட்ட காவல்துறையினர் கொலையா? தற்கொலையா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் அருள்மிகு கலசிலங்கம் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூர்,வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அருள்மிகு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நெள படா ஹர்சித் (19) வயது மாணவன் பிடெக் (சிஎஸ்சி) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவன் காலையில் வகுப்பறையில் இருந்த நிலையில் திடீரென கல்லூரியில் உள்ள விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் தூக்கிட்ட நிலையில் சடலமாக விடுதியில் தொங்கியபடி இருந்துள்ளார்.தகவல் அறிந்து வந்த கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கல்லூரி மாணவனின் இறப்பு கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா ?என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த மாணவனின் உறவினர்கள், மாணவனின் நண்பர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை என்பது நடைபெற்று வருகிறது. இந்த அருள்மிகு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவ மாணவிகள் அடிக்கடி தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவம் பொதுமக்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவனின் இறப்பு மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News