ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பாராட்டு விழா;

Update: 2025-04-25 16:33 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, வியாழக்கிழமை அன்று குருவிக்கரம்பை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு சேதுபாவாசத்திர வட்டார கல்வி அலுவலர்கள்  மா.க. இராமமூர்த்தி,   சுப.சிவசாமி தலைமை வகித்தனர். விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  க.சந்திரன், கு.சின்னத்தம்பி , இரா.இராஜேந்திரன்,  மா.மணிமுத்து, த.புஷ்பம்,  நா.ராஜேந்திரன்,  க.முருகையன், கா.பாலன், , க.சுவாமிநாதன், சா.புஷ்பம், கா.கமலேஸ்வரி, தா.ஜான்சி சாரா டாணி, அ.மோகன்ராம் ஆகியோருக்கு கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.  விழாவிற்கு சேதுபாவாத்திரம் ஒன்றியத்தின் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டினர்.

Similar News