உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!
உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பால், பன்னீர், விபூதி, தேன், சந்தனம் ஆகியவை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து, சூடம் ஏற்றினர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.