விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சுபலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.