குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயற்சி செய்த நபர்
ஆட்சியர் அரைக்கும் முன்னே தீ குடிக்க முயற்சி செய்தால் பெரும் பரபரப்பு;
பெரம்பலூர் மாவட்டம் அசூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (45). இவரது மனைவி சின்னப்பிள்ளை (40), இவரது மகள்கள் வசந்தி (22), செம்பருத்தி (26). சின்னப்பிள்ளை வசந்தி, செம்பருத்தி, ஆகிய மூன்று பேரும் இன்று காலை கலெக்டர் கிரேஸ் பச்சாவை சந்திக்க கலெக்டர் ஆபீசுக்குள் வந்தனர். அப்போது கலெக்டர் அறை முன்பு எதிர்பாராதமாக கேன்களில் மறைத்து வைத்திருந்த இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து, காப்பாற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேவேந்திரனுக்கு அசூரில் உள்ள வீடு ஆகியவற்றை அவரது பங்காளிகள் உரிய முறையில் பங்கு பிரித்து கொடுக்காமலும், பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்காமலும் இருப்பதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தனர். பெட்ரோல் ஊற்றி 3 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு