இருசக்கர வாகனம் விபத்து, ஒருவர் பலி
டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டூவீலரில் சென்ற கிழக்குவாடியை சேர்ந்த அருண்குமார் (28) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.;
பெரம்பலூர்: இருசக்கர வாகனம் விபத்து, ஒருவர் பலி பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் அருகே நேற்று (ஏப்.24) மாலை டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டூவீலரில் சென்ற கிழக்குவாடியை சேர்ந்த அருண்குமார் (28) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற பிரகாஷ் (30) படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெரம்பலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்