கால்வாயில் நாய் சடலம் துர்நாற்றம் வீசுவதாக புகார்
கால்வாயில் மிதக்கும் நாய் சடலத்தை அகற்றி, அப்பகுதி முழுதும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என, கோரிக்கை;
காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஓரிக்கை அருகே உள்ளது அதியமான் நகர். இந்த நகர் அருகே, பெரிய அளவிலான மழைநீர் கால்வாய் செல்கிறது. கால்வாயில், நாய் ஒன்று இறந்து, அதன் சடலம் இரண்டு நாட்களாக மிதக்கிறது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அப்பகுதியினருக்கு நோய் பரவும் என அச்சமடைகின்றனர். மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், கால்வாயில் மிதக்கும் நாய் சடலத்தை அகற்றி, அப்பகுதி முழுதும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.