கோவை: தவெக மாநாடு - கோவையில் குவிந்துள்ள விஜய் ரசிகர்கள் !
நடிகர் விஜய் கோவை வரும் நிலையில் அவரை வரவேற்பதற்கு கோவை விமான நிலையத்தில் குவிந்திருக்கும் தொண்டர்கள்.;
கோவை மாவட்டதில் தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக த.வெ.க தலைவர் நடிகர் விஜய் இன்று கோவை வருகை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விஜய்யின் வருகையை உற்சாகமாக வரவேற்கும் விதமாக, த.வெ.க தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேளதாளங்கள் முழங்க, ஜமாப் இசையின் துணையுடன் தொண்டர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான காவல்துறையினர் விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். த.வெ.க தொண்டர்கள் ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் வரவேற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விஜய்யின் வருகை, கோவை த.வெ.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது வருகை, பூத் கமிட்டி மாநாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.