கோவை: சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு நடவடிக்கை !
கோவை மாநகர பகுதியில் பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் பங்குச்சந்தை மோசடிகள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் கோவை சைபர் கிரைம் காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
கோவை மாநகர பகுதியில் பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் பங்குச்சந்தை மோசடிகள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வாளர் அருண் மற்றும் உதவி ஆய்வாளர் சரண்யா தலைமையிலான காவல்துறையினர், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் மூலம் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உதவி ஆய்வாளர் சரண்யா தலைமையிலான குழுவினர் கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், மோசடிகள் குறித்து ஆலோசனை வழங்கியதோடு, ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். இதுவரை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் காரணமாக, முன்பு தினமும் வந்த சைபர் கிரைம் புகார் களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.