பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி ஆட்சியர் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.. பெண் குழந்தை முகமூடி அணிந்து கொண்டு விழிப்புணர்வு ..;

Update: 2025-04-26 08:57 GMT
தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி, இன்று காலை நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஷ் கலந்து கொண்டு, பெண் குழந்தைகள் உருவ முகமூடி அணிந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த வாசகங்கள் அடைந்த துண்டறிக்கையை பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு ஆட்சியர் சதீஷ் விநியோகம் செய்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுப்போம், இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிவதும், பெண்ணென கருவிலே கலைப்பது, பிறந்த பிறகு கொலை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பெண் குழந்தை முகமூடி அணிந்து, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

Similar News