போலீசாருக்கு தலைகவசம் வழங்கும் நிகழ்வு.

மதுரையில் போலீசாருக்கு தலைகவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-04-26 10:38 GMT
மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள, காமராஜர் அரங்கில் நேற்று (25.04.2025) மாநகர போக்குவரத்து காவல் மற்றும் Truhome finance நிறுவனம் இணைந்து, மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தலைக்கவசங்கள் வழங்கிய மாநகர காவல் ஆணையர் அவர்கள், சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசத்தின் முக்கியத்துவங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து திட்டமிடல்) ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News