வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்
கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்;
தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அறிவுறுத்தலில் படி, வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை உதவி மையம் கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமையில் துவங்கப்பட்டுள்ளது.கல்லுாரி முதல்வர் செய்திக்குறிப்பு;வானுார் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாணவர்கள் சேர்க்கை தொடர்பான தகவல் பெற கல்லுாரியில் செயல்படும் உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.இக்கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவில், தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள் உள்ளது.கல்லுாரி தொடர்பான விபரங்களை, உதவி மையத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அனைத்து கல்லுாரி வேலை நாட்களிலும், உதவி மையம் செயல்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.