கராத்தே மாணவர்கள் பிளாக் அட்டாக் முறையில் ஓடு உடைத்து சாதனை
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 49 ஆம் ஆண்டு முப்பெரும் விழா. இதில் 30 நிமிடங்களில் ஆறு வயது முதல் 12 வயது வரை உள்ள மழலைகள் 2222 முறை பிளாக் மற்றும் அட்டாக் முறையில் ஓடு உடைத்தல் சாதனை நிகழ்வு நடைபெற்றது;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 49 ஆம் ஆண்டு முப்பெரும் விழா. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கராத்தே பயிற்சி மாணவர்களின் சாதனை நிகழ்வாக 30 மாணவர்கள் 30 நிமிடங்களில் 2222 முறை பிளாக் மற்றும் அட்டாக் முறையில் ஓடு உடைத்தல் சாதனை நிகழ்வு நடைபெற்றது. கராத்தே பயிற்சி பெற்ற ஆறு வயது முதல் 12 வயது வரையிலான மழலை மாணவர்கள் ஓடு உடைத்தல் சாதனை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். 1111 முறை பிளாக் மற்றும் அட்டாக் முறையில் 1111 ஓடுகளை அடுத்தடுத்து உடைத்து சாதனை நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.