கோவை: பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை !

சுதந்திரம் பெற்றதிலிருந்து பாகிஸ்தான் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாத நாடாக உள்ளது என ஆளுநர் ராதாகிருஷ்ணன் கருத்து.;

Update: 2025-04-27 03:41 GMT
1947-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாத நாடாக பாகிஸ்தான் உள்ளது. பங்களாதேஷை இழந்தும் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாகவே அந்நாடு உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் இந்தியாவை சீண்டி, மக்களைக் கொன்று குவித்ததற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடுமையாக எச்சரித்தார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது, பாட்ஷாவையும், பாகிஸ்தான் தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் போக்கை கைவிட வேண்டும். இஸ்லாமியர்கள் வேறு, இஸ்லாமிய தீவிரவாதிகள் வேறு என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பது எனது கனிவான வேண்டுகோள். தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாறுபட்ட விதத்தில் உள்ளன. கேரளாவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது அதற்கு மாறான தீர்ப்பு வந்துள்ளது. சட்ட வல்லுநர்களைக் கொண்டு இதற்கு சரியான தீர்வு காண வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்து மோதல்கள் வருவது நல்லதல்ல. உரிய தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் செய்ததற்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Similar News