கோவை: வெறிநாய்கள் தொல்லை அதிகரிப்பு !

கோவை வடக்கு பூச்சியூர் நரசிம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட உமா மெடிக்கல் தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் மாடுகளை கடித்து காயப்படுத்தி உள்ளது.;

Update: 2025-04-27 05:30 GMT
கோவை வடக்கு பூச்சியூர் நரசிம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட உமா மெடிக்கல் தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள், பிரகாஷ் குமார் மற்றும் தேவராஜ் ஆகிய விவசாயிகளின் மாட்டைக் கடித்துவிட்டன. கோவை மாவட்டத்தில் கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, குருடம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளில் தெருநாய்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விவேக் இன்று வலியுறுத்தியுள்ளார். விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தெருநாய்கள் ஆடு, மாடு மட்டுமின்றி, பொதுமக்களின் குழந்தைகளையும் கடிக்க நேரிடும். அதன் பிறகே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்தாவிட்டால், பொதுமக்களைத் திரட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று விவேக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News