புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை;
திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று சிறுவை பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் பகுதியில் இருந்து சிறுவை நோக்கி ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், 15 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்டாலின், 27; என்பதும், திருக்கனுாரில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க கடத்திச் சென்றதும் தெரியவந்தது.உடன், அவர் மீது வழக்குப் பதிந்து மது பாட்டில் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்து, ஸ்டாலினை கைது செய்தனர்.