திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு மௌன அஞ்சலி ஊர்வலம்

திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு மௌன அஞ்சலி ஊர்வலம்;

Update: 2025-04-27 06:02 GMT
திருச்செங்கோட்டில் வாழும் அனைத்து கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்களும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்காளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் பங்குத்தந்தை எட்வர்ட் ததேயூஸ் அவர்கள் தலைமையில் மெட்டாலா இயேசு சபை பொன்.ரூபன் முன்னிலையில் மௌன அஞ்சலி ஊர்வலம் மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்றது. இந்த மௌன அஞ்சலி ஊர்வலம் சேலம் ரோடு புனித மரியன்னை ஆலயத்தில் இருந்து நாமக்கல் ரோடு வரை மெழுகு வத்தி ஏந்தி ஜெபம் செய்து மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்

Similar News