கோவை: நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு!

கோவையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு வெடிகொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு.;

Update: 2025-04-27 06:03 GMT
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கோவையில் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக தங்கியுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அருகில் அமைந்திருக்கும் கோகுலம் பார்க் என்ற தனியார் ஹோட்டலுக்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் பரவியதை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஹோட்டலின் ஒவ்வொரு பகுதியையும் துருவித் துருவி ஆய்வு செய்தனர். எனினும், இந்த மிரட்டல் வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கேரளாவில் உள்ள இதே நிறுவனத்திற்கு சொந்தமான ஹோட்டல்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த செய்தி தவறாக இங்கு பரப்பப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டலில் முழுமையாக சோதனை செய்தோம். தற்போது நிலைமை முற்றிலும் சீராக உள்ளது என்று தெரிவித்தனர். இந்த பொய்யான வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் உடனடியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Similar News