ராசிபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.
ராசிபுரம் அருகே ஒடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தர்.;
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதி, அம்பேத்கார் நகரை சேர்ந்த 9 பேர் 2 மாதங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்றனர். இந்த நிலையில் கட்டிட பணியை முடித்து விட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய அவர்கள், அருப்புக்கோட்டையில் இருந்து நாமக்கல் மார்கமாக பெங்களூருக்கு செல்லும் ரயிலில் ஏறி பயனம் செய்தனர். அப்போது சங்கர் என்பவர் ரயில் பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இதைக் கண்ட சக நண்பர்கள், சங்கரிடம் இப்படி படியில் அமர்ந்து செல்ல வேண்டாம் விபத்து ஏற்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சங்கர் நண்பர்களின் பேச்சை கேட்காமல் படியில் அமர்ந்தவாரே பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ரயில் ராசிபுரம் அருகே சென்று கொண்டிருக்கும் போது படியில் அமர்ந்து பயணம் செய்த சங்கர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அருகே இருந்த மின்சார கம்பத்தில் மோதியதால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பபட்டு சங்கர் இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இது குறித்து, வழக்குப் பதிவு செய்து, இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி அனுப்பி வைத்தனர்.