மொரப்பூர் வனசரகத்தில் மண் கடத்தியவர்கள் கைது

அரூர் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் வனசரகத்தில் மண் கடத்தியவர்கள் கைது;

Update: 2025-04-27 07:40 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட மூக்கனூர் காப்பு காட்டில் டிப்பர் லாரியில் மண் கடத்தவதாக மொரப்பூர் வனசரக அலுவலர் ஆனந்த் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் கடத்தூர் பிரிவு வனவர் சுருதி, ஓடசல்பட்டி வனப்காப்பாளர் முனியாண்டி, மூக்கனூர் வனக்காப்பாளர் எம்சுந்தர், ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காலை அப்பகுதியில் இருந்து சென்றனர் அப்போது சம்பவ இடத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்களை விசாரணை நடத்திய போது அவர்கள் அருகே உள்ள முருகேசன் மற்றும் பெரியண்ணன் காரிமங்கலம் பகுதி சேர்ந்த முருகேசன் என மூன்று பேர் பொக்கலைன் எந்திரம் உதவியுடன் டிப்பர் லாரியில் மண் எடுத்து அனுப்பியது தெரியவந்தது இது குறித்து மொரப்பூர் வனசரக அலுவலர் ஆனந்த் குமார் வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் பெரியண்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு தலா ₹30,000 அபராதம் விதித்தார் மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News