வெள்ளியங்கிரி: கோவில் மலையடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்
கோவை,பூண்டி வெள்ளியங்கிரி கோவில் மலையடிவாரத்தில் ஒரு காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.;
கோவை,பூண்டி வெள்ளியங்கிரி கோவில் மலையடிவாரத்தில் நேற்று ஒரு காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியது. அங்கிருந்த உணவுப் பொருட்களை தின்றும் நாசம் செய்தது. இதன் காரணமாக, பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த, வனத்துறையினர் மலையடிவாரப் பகுதியிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அடிக்கடி காட்டு யானைகள் இதுபோல, அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சத்தில் வாழ வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.