கோவை: ஜல்லிக்கட்டு போட்டி - சீறிபாயும் ஜல்லிக்கட்டு காளைகள் !
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.;
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் 9 வது ஆண்டாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துகின்றன. இப்போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாடி பிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 750 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.