வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா
வருகிற 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்;
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில், சித்திரை பெருவிழா நேற்று காலை பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. கோயிலின் முகப்பில் பந்தக்கால் ஊன்றப்பட்டு தீப தூப ஆராதனை காட்டப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற மே மாதம் 1 -ம் தேதி முதல் 13 -ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா, வருகிற மே மாதம் 3 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற மே மாதம் 11 -ம் தேதியும், வருகிற 12 -ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.