நாமக்கல் கட்டுனர் சங்கம் சார்பில் அணியாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் !
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நாமக்கல் மையத்தலைவர் பி.எஸ்.டி. தென்னரசு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்துப் பேசினார். அப்போது, பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாதம் இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.;
அணியாபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், அகில இந்திய கட்டுனர் சங்க, நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி சார்பில், அணியாபுரத்தில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.பில்டர்ஸ் அசோசியேசன் நாமக்கல் மையம் (பிஏஐ) , திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவமனை மற்றும் அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச மருத்து முகாம் அணியாபுரத்தில் நடைபெற்றது. லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி தாளாளர் வெங்கடாஜலம், செயலாளர் பாலகிருஷ்ணன், கான்ட்ராக்டர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நாமக்கல் மையத்தலைவர் பி.எஸ்.டி.தென்னரசு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.அப்போது பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாதம் இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.இதுவரை நடைபெற்ற 6 முகாம்களில் மொத்தம் 2,345 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிஏஐ மூலம் உதவிகள் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.சுவாமி விவேகானந்தா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். பில்டர்ஸ் அசோசியேசன் உறுப்பினர்கள் நடராஜ்,காளியப்பன்,ரவிச்சந்திரன்,பாலசுப்ரமணியன், அசோக்குமார், இன்ஜினியர்கள் கமலநாதன், நடராஜன், மணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.