திருமானூரில் விவசாய கண்காட்சியில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கிய வேளாண் புல மாணவர்கள்

திருமானூரில் விவசாய கண்காட்சியில் விவசாயிகளுக்கு விதைகள் வேளாண் புல மாணவர்கள் திருமானூரில் விவசாய கண்காட்சியில் விவசாயிகளுக்கு விதைகளை வேளாண் புல மாணவர்கள் வழங்கினர்.;

Update: 2025-04-27 15:09 GMT
அரியலூர், ஏப்.28- அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திருச்சிராப்பள்ளி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத்தின் ஒரு பாகமாக விவசாய கண்காட்சி நடத்தினர். இதில் பாரம்பரிய விதைகள், நவீன நீர் பாசன கருவிகள், கால்நடை பொருட்கள், களை எடுக்கும் இயந்திரங்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் பொறிகள், இயற்கை பூச்சி விரட்டி மருந்துகள், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை மற்றும் பால் பண்ணை பற்றிய செயல் திட்டங்கள் போன்றவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை மற்றும் விலையில்லா பூச்சி மருந்து தயாரிக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு தங்களின் அனுபவம் மற்றும் செயல்முறைகளை வேளாண் புல மாணவர்கள் பகிர்ந்தனர். இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் இச்செயலை விவசாயிகள் வெகுவாக பாராட்டினர்.

Similar News