கெங்கையம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
கீழ்ஆலத்தூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரம் செய்து, படையல் படைத்து அம்மனை வழிப்பட்டனர். இதில் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.