போச்சம்பள்ளி அருகே ஆடு திருடியவரின் டூவீலர் விபத்தில் சிக்கியது.
போச்சம்பள்ளி அருகே ஆடு திருடியவரின் டூவீலர் விபத்தில் சிக்கியது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வேடர் தட்டக்கல் அருகே சென்றபோது அந்த பகுதியில் முதியவர் ஒருவரும் டூவீலரில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து விசாரணை நடத்தியதில் அவர் தொப்புடி குப்பம் பகுதியை சேர்ந்த சண்முகம் (60) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இடத்தில் இரண்டு சாக்கு பையில் இருபப்பதை பார்த்து அதை பிரித்து பார்த்த போது அதில் 2 ஆடுகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. மேலும் விசாரணையில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சண்முகம், ஆடுகளை திருடிக்குகொண்டு வரும்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவரது டூவீலர் மீது மோதியது. தெரியவந்ததது. அவர் யாருடைய வீட்டில் ஆடுகளை திருடி வந்தார என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்