மதுரைக்கு புறப்படும் முருகப்பெருமான்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சித்திரை திருவிழாவின் காரணமாக வரும் மே.7 ம் தேதி மதுரைக்கு புறப்படுகிறார்.;
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற மே.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங் கேற்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், மீனாட்சி அம்மனை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக் கனிவாய் பெருமாள் கெண்டி செம்புடன் வருகிற மே.7-ஆம் தேதி மதுரைக்கு புறப்பாடாக உள்ளனர். 8-ஆம் தேதி அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நால்வர் சந்நி தியை சென்றடைவர். அங்கு சுவாமிகள் சந்திப்பு நடைபெறும். பின்னர், சுவாமிகள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர். திருக்கல்யாண நிகழ்வுக்குப் பிறகு இரவு சுவாமிகள் பூப்பல்லக்கில் மதுரையில் வீதி உலா எழுந்தருளுவர். தொடர்ந்து 10-ஆம் தேதி வரை மதுரையில் இருக்கும் சுவாமிகள், 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் எழுந்தருளி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தடைந்தார்.