ஆலங்குடி தெற்கு பாத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த் ததும் சேவல் சண்டை நடத்தியவர்கள் தப்பியோடினர். அறந்தாங்கி விக்னேஸ்வரபுரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (25)என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அங்கிருந்த 2 சேவல்கள் மற்றும் 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய் தனர். தப்பியோடிய நபர்களை தேடிவருகின்றனர்.