கோவை:வெளிப்படையாக நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சி அமையும்-விஜய்
த.வெ.க. அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல,மக்களுக்கு நல்லது செய்ய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம் என விஜய் பேச்சு.;
கோவை குரும்பபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அவர் நேற்று பேசுகையில், த.வெ.க. அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம். த.வெ.க. ஆட்சி ஊழல் இல்லாத, குற்றவாளிகள் இல்லாத, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும். வாக்குச்சாவடி முகவர்கள் மக்களிடம் எந்த தயக்கமும் இன்றி தைரியமாக செல்ல வேண்டும். அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை மனதில் கொண்டு மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு உதவ வேண்டும். வாக்குப்பதிவை மக்கள் பண்டிகையாக கருத வேண்டும். த.வெ.க. வெற்றியடைய வாக்குச்சாவடி முகவர்களின் பங்கு முக்கியமானது. நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம், என்றார். இந்த கருத்தரங்கில் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.