கோவை: சாதிப்பெயர் இல்லாத மாநிலம் தமிழ்நாடு - உதயநிதி !
தமிழ்நாடு அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல என்று கோவையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.;
கோவை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு திராவிட இயக்கத்தின் கோட்டை என்றும், பாஜகவின் கனவு பலிக்காது என்றும் கூறினார். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக பாஜகவின் காலில் விழுந்து கிடப்பதாகவும், பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி திமுக தான் என்றும் அவர் கூறினார். 2026 சட்டசபை தேர்தலில் மதவாதிகளையும், அடிமைகளையும் வீழ்த்த வேண்டும் என்றும், தமிழ்நாடு அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.