கோவை: ஜல்லிக்கட்டு போட்டி - பரிசுகளை தட்டிச் சென்ற வீரர்கள்!

கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்திய பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு திருவிழா கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே வெகு விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2025-04-28 06:22 GMT
கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்திய பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு திருவிழா நேற்று கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த போட்டியைத் தொடங்கி வைத்தார். தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவையின் தலைவர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்., வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் அவர்களின் சார்பில், அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், யாருக்கும் பிடிபடாத சிறந்த காளைக்கு துணை முதல்வர் அவர்களின் சார்பில் மற்றொரு கார் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், மூன்றாவது பரிசாக இ-ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. போட்டிக்கு முன்னதாக, ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் அமைச்சர் முன்னிலையில் வீர உறுதிமொழி ஏற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன.

Similar News