ஈரோட்டில் லாட்டரி விற்ற இருவர் கைது

ஈரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது;

Update: 2025-04-28 06:51 GMT
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மா நில லாட்டரிகளை விற்பனை செய்து வருவதாக ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் பவானி மெயின்ரோடு, அக்ரஹாரம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றின் அருகில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நஞ்சப்பா நகரை சேர்ந்த அசோக்குமார் (37) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.மேலும், அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 10, ஒரு செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதேபோல, திரு நகர் காலனி, தபால் அலுவலகம் அருகில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த கே.என்.கே.ரோடு பின்புறம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (48) என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.அவரிடமிருந்தும் 10 லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News