கோவை: தடுப்புச் சுவரில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து !
கருமத்தம்பட்டி அருகே மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஓட்டிய வேன், மேம்பால தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஓட்டிய வேன், நேற்று மேம்பால தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சிக்கு தென்னை மட்டை ஏற்றிச் சென்ற வேன், அதிவேகமாக வந்து மேம்பாலத்தின் தடுப்பில் மோதியதில், மின் விளக்கு கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்தில் வேன் தலைகீழாக தொங்கியதால், தென்னை மட்டைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.