கோவை: ஆன்லைன் முதலீட்டு மோசடி - ராஜஸ்தான் வாலிபர் கைது !

ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்தவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.;

Update: 2025-04-28 07:41 GMT
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ரூ.47,40,000 மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேந்திர தேவால் என்பவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். சமூக வலைதள விளம்பரம் ஒன்றை நம்பி, கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் பல்வேறு தவணைகளில் சுரேந்திர தேவாலின் வங்கிக் கணக்கில் ரூ.47,40,000 முதலீடு செய்துள்ளார். பணத்தைப் பெற்ற பிறகு, சுரேந்திர தேவாலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில் சுரேந்திர தேவால் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. கோவை போலீஸார் ராஜஸ்தான் சென்று அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் 11 வங்கிக் கணக்குகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.18,19,944 பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News