மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3.74 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-04-28 09:19 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 540 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19,077/- மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.51 இலட்சம் மதிப்பில் செயற்கை கால் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,980/- மதிப்பில் ரோலேட்டர் என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.74 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.முன்னதாக, பரமத்தி வேலூர் வட்டம், கூடச்சேரி கிராமத்தை சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் திருமணிமுத்தாறில் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி உதவியாக ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையையும், குமாரபாளையம் வட்டம், ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்த தனபால் வன்கொடுமையால் இறந்ததையடுத்து அவரது சகோதரர் தினேஷ்குமார் என்பவருக்கு நாமக்கல் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலர் பணியிடத்திற்கான பணி ஆணையினையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News