நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-28 09:28 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கக்கோரியும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தியும் சித்தாளந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில். இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து சித்தாளந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேச பாண்டியன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஆதிநாராயணன் விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பூபதி வேலாயுதம் சிஐடியு நிர்வாகி ராயப்பன் ஒன்றிய குழு உறுப்பினர் செங்கோடன் நகரச் செயலாளர் சீனிவாசன் முன்னாள் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் 100 நாள் வேலை திட்டத்தில் 23 ஆயிரம் கோடி பணம் நிலுவையில் உள்ளது என்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தியும் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இது குறித்துதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு பிரதிநிதி ஆதிநாராயணன் கூறும் போது 100 நாள் வேலை திட்டத்தில் கொடுக்க வேண்டிய 23 ஆயிரம் கோடி 4 மாதமாக நிலுவையில் உள்ளது. மேலும் இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் தமிழக அரசுபலமுறை கேட்டும் பணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள பணத்தை விடுவிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்ற வேண்டும். 319 ரூபாய் மட்டுமே தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்குஊதியமாக கொடுக்கப்படும் நிலையில் இதனை உயர்த்தி 400 ரூபாயாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Similar News