முன் விரோத தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு
வழக்குப் பதிவு;
கோம்பை பகுதியை சேர்ந்தவர் சௌந்தரபாண்டி. இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் கெங்காடி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் இருந்த சௌந்தரபாண்டி மற்றும் அவரது மனைவியை கெங்காடி அவரது மனைவி கீதா மகன் ராஜா ஆகியோர் ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டுள்ளனர். இது குறித்த புகாரில் மூவர் மீதும் கோம்பை போலீசார் நேற்று (ஏப்.27) வழக்கு பதிவு செய்தனர்.