தர்மபுரியில் பூக்கள் விலை சரிவு

தர்மபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக பூக்கள் விலை சரிவு;

Update: 2025-04-28 10:57 GMT
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப நாட்களாக பொழிந்த கனமழையின் காரணமாக பூக்கள் நன்கு சாகுபடி ஆகி உள்ளது இதனை அடுத்து தர்மபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது இன்று ஏப்ரல் 28 (கிலோவில்) குண்டு மல்லி ஒரு கிலோ  ரூ.240 ,காக்கணம் பூ ரூ. 300, சாமந்தி பூ ரூ.160 முதல் 200 வரையும், கனகமரம் ரூ. 400, பன்னீர்ரோஜா ரூ.80, செண்டுமல்லி பூ ரூ.30, சம்பங்கி பூ ரூ.60, அரளி பூ ரூ.80, கோழி கொண்டை ரூ.60, சன்ன மல்லி ரூ.140 என பூக்கள் விற்பனையானது. மேலும் தொடர்ந்து பூக்கள் வரத்து அதிகரித்தால் விலை மேலும் செய்ய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Similar News